தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், 2022- 23 வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார்.
அதில், இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாவன, நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ₨500 கோடி நிதி ஒதுக்கீடு, வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ₨1 லட்சம் நிதியுதவி, பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு, எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பன போன்ற திட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ₨12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ₨381 கோடி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ₨5,157 கோடி நிதி ஒதுக்கீடு, சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ₨3 கோடி ஒதுக்கீடு என்பன போன்ற அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, 2022 – 23 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டினை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்றைய தினம் பேரவையில் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.