Editor's Picksதமிழ்நாடு

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் ; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை ஏமாற்றும் வெற்று பட்ஜெட் இதுவென விமர்சித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, தனி வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையையும் இல்லை, வெறும் கண் துடைப்பிற்காகவே தனி வேளாண் பட்ஜெட் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முன்னதாக, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்த வேளாண் துறைக்கான பட்ஜெட்டில், நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ₨500 கோடி நிதி ஒதுக்கீடு, வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ₨1 லட்சம் நிதியுதவி, பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு, எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பன போன்ற திட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts