திருப்பூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளன.
விபத்து
திருப்பூர், காக்கா பள்ளம் பிரிவில் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற காரும், திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும்நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஊதியூர் காவல்நிலைய போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பேராத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த மூவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

