நூற்றாண்டுகளாக மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று தான் காலப்பயணம். இறந்த காலத்திற்க்கோ, எதிர்காலத்திற்க்கோ சென்று நிகழ்ந்தனவற்றை மாற்றி அமைக்கவோ, நிகழவிருப்பவற்றை முன் கூட்டியே அறிந்து கொள்ளவோ காலத்தினூடே பயணித்தால் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று தான்.
கற்பனையில் காலப்பயணம் சுவாரஸ்யமான விடயமாக தெரிந்தாலும், இதனை வெற்றிகரமாக மேற்கொள்வது என்பது இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் மிகவும் கடினமான ஒன்றாகும்.இந்த காலப்பயணம் குறித்து ஏராளமான நாவல்களும் திரைப்படங்களும் வந்திருந்தாலும்,என்றாவது ஒரு நாள் இந்த காலாப்பயனக் கோட்பாடு சாத்தியமாகிவிடாதா என்று ஏங்குவோர் பலர் உள்ளனர்.
இதோடு இதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றது. காலப்பயணம் (Time Travel) பற்றிய கருத்து இன்று வரை பல்வேறு முரண்பட்ட கருத்துகளை கொண்டுள்ளது. காலப்பயணத்தைப் பற்றிய குறிப்புகள் பண்டைய காலத்தில் இருந்து காணப்படுகிறது.
நவீன தத்துவங்கள் 1895 ல் ஹச்.ஜி. வெல்ஸ் ( H.G.Wells ) எழுதிய தி டைம்ஸ் மெஷின்( The Time Machine ) என்ற புத்தகத்திலிருந்தான் தோன்றியது. நாம் அறிந்து இது தான் முதல் காலப்பயணம் பற்றிய புத்தகமாகும். காலப்பயணம் சாத்தியமா, அல்லது சாத்தியமற்றதா என்பது மிகவும் குழப்பமான நிலையில் இருந்து வரும் சூழலில் காலப்பயணம் குறித்த தகவல்களை பற்றி பார்ப்போம்.
காலப்பயண கோட்பாட்டில் பல முரண்கள் இருந்தாலும், பலராலும் பேசப்பட்டு விவாதிக்கப்படும் முரண்பாடு கிராண்ட்பாதர் பாரடாக்ஸ் (Grandfather Paradox ) எனப்படும் உலகப்புகழ்ப்பெற்ற முரண்பாடு தான்.
Grandfather Paradox – தாத்தாவை கொன்றால் அப்பா இருப்பாரா ? :
நீங்கள் கடந்த காலத்திற்குச் சென்று உங்கள் தாத்தாவைக் கொன்றால் உங்கள் அப்பா பிறந்திருக்க மாட்டார் அதனால் நீங்களும் இருக்க மாட்டீர்கள். நீங்கள் பிறக்கவில்லை என்றால், உங்கள் தாத்தாவைக் கொன்றது யார் அதனால் நீங்கள் இப்படி டைம் ட்ராவல் செய்து கடந்த காலம் அல்லது நிகழ் காலத்திற்கு சென்றாலும் நீங்கள் எதையும் மாற்ற முடியாத ஒரு பிம்பமாகவே இருப்பீர்கள்.
கால பயணங்களை மேற்கொண்டதாகக் கூறும் நபர்களின் கூற்றுப்படி, கடந்த காலங்களில் நீங்கள் செல்லும் பொழுது அங்கு வாழும் மக்கள் மற்றும் கட்டிடங்களை நீங்கள் காணலாம். வானிலை திடீரென மாறிவிட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
நிகழ்காலத்தில் இல்லாத பல விஷயங்களை நீங்கள் காணலாம். ஆனால் நீங்கள் பார்க்கும் எந்தவொரு பொருளையும் நீங்கள் தொடவோ எடுக்கவோ முடியாது. கடந்த காலத்தில் நீங்கள் பார்க்கும் நபர்கள் உங்களைப் பேசவோ பார்க்கவோ மாட்டார்கள். நீங்கள் உங்களுடையவர்களாக இருக்கிறீர்கள், இருவரும் ஒருபோதும் தொடர்பு கொள்ள முடியாது.
விண்வெளியில் நாம் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறோமோ அவ்வளவு மெதுவாக நாம் கால பயணத்தில் பயணிக்கிறோம். காலம் நான்காவது பரிமாணம். எனவே நீங்கள் டைம் ட்ராவலில் பயணிக்கும்போது, நான்காவது பரிமாணத்தில் பயணிக்கிறீர்கள். டைம் ட்ராவல் அப்படி ஒரு குழப்பமான பயணம்.
கடந்த காலத்தைப் பற்றிய அறிவு ரெட்ரோகாக்னிஷன் (Retrocognition) என்று அழைக்கப்படுகிறது. அதாவது கடந்த கால பயணம். காலப்பயணம் செய்ய ஒளியை விட வேகமாக பயணிக்க வேண்டும். ஒளியின் வேகத்தில் 99.5% சதவிகித வேகத்தில் நீங்கள் பயணிக்க முடிந்தால் உங்களுக்கு 4 நண்பர்கள் உள்ளனர் என வைத்து கொள்ளுங்கள்.
அனைவருக்கும் ஒரே வயது அதாவது 20 வயதாக இருந்தால் உங்கள் 25 வயதில் நீங்கள் காலப்பயணத்தில் பயணித்துக்கொண்டு இருந்தால் உங்கள் நண்பர்கள் வயது 70 ஆக இருக்கும். நீங்கள் 20 வயதில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பயணம் செய்திருந்தால் உங்களுக்கு 25 வயதாகும் போது, உங்கள் நண்பர்கள் அனைவரும் 70 வயதை எட்டியிருப்பார்கள்.
இயற்பியல் மூலம் காலப்பயண இயந்திரங்கள் தயாரிப்பது சாத்தியமற்றது என்பதை உணர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் டைம் டிராவல் குறித்த ஆய்வுகளுக்கு தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
டைம் டிராவல் வழிமுறைக்கு தடை கோரும் வகையில் ‘க்ரோனோலாஜி ப்ரோடெக்ஷன் கான்ஜெச்சர்’ (Chronology Production Conjecture) என்ற பெயரில் சட்டம் இயற்ற வேண்டும் என கூறி வந்த ஸ்டீபன் ஹாக்கிங், கோரிக்கை விடுத்த போதும் இன்று வரை இச்சட்டம் இயற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.சட்டம் இயற்றப்படாததை தொடர்ந்து ஹாக்கிங் காலப்பயணம் மேற்கொள்வது சாத்தியமாகலாம், ஆனால் இது நடைமுறை இல்லை என தெரிவித்தார். காலப்பயணம் மேற்கொள்ளும் போது பிரபஞ்சம் மாறாது, இதனால் காலப்பயணத்தினை உண்மையில் உணரவே முடியாது. உண்மையில் காலப்பயணம் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி மட்டும் நிலையாய் இருக்க டைம் டிராவல் குறித்த ஆராய்ச்சிகளும் அவ்வப்போது கோட்பாடுகளும் வெளியாகி கொண்டே தான் இருக்கும்.