மூன்றாவது பாடல்
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அடுத்ததாக இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தை எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், லவ் டுடே படத்தின் ‘பச்சை இலை’ என்ற மூன்றாவது பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
The trippy #PachaElai from #LoveToday is here! Movie In Theatres from Nov 4th 😊
A @pradeep_ranganathan show✨@Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @iYogiBabu pic.twitter.com/iPOt7TWcYH
— Raja yuvan (@thisisysr) October 17, 2022

