‘காதுவக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’.
ரிலீஸ் தேதி
பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படத்தை ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், யசோதா’ திரைப்படம் அடுத்த மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Make way for #Yashoda in theatres on Nov 11th 2022🔥
Releasing Worldwide in Telugu, Tamil, Malayalam, Kannada & Hindi#YashodaTheMovie @Samanthaprabhu2 @varusarath5 @Iamunnimukundan @harishankaroffi @hareeshnarayan #Manisharma @krishnasivalenk @SrideviMovieOff pic.twitter.com/YgXeFh9i6i
— Sridevi Movies (@SrideviMovieOff) October 17, 2022