லிரிக்கல் வீடியோ
2007-ம் ஆண்டு வெளியான கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதனைத்தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானார். இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘இடம் பொருள் ஏவல்’. இப்படத்தை நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது திரைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார்.
பறவைகள் எச்சந்தான்
காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு@Vairamuthu@thisisysr
ஆதிகுரல்@anthonydaasan#Priyadharshini#இடம்பொருள்ஏவல்https://t.co/yoyrzyIAYc@ThirrupathiBros@dirlingusamy@VijaySethuOffl @TheVishnuVishal @aishu_dil @Nanditasweta @mukasivishwa @onlynikil— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) October 17, 2022