தமிழர் இனத்திற்கே துரோகம் செய்த கட்சி காங்கிரஸ் என்றும் புதிய புதிய ஊழல்ழகளை செய்து ஊழலுக்கு வழிவகுத்த கட்சியும் காங்கிரஸ் தான் என சமூக சேவகர் சார்லஸ் மார்டின் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
SS News Digital சார்பில் புதுச்சேரி சாதனையாளர்களை கௌரவித்தல் மற்றும் ஆளுமைகளைப் பாராட்டும் புதுச்சேரியின் பெருமைக்குரியவர்களுக்கான விருதுகள் – 2025 (PRIDE OF PUDUCHERRY) நிகழ்ச்சி, புதுச்சேரி அடுத்த பட்டானூர் பகுதியில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
சமூக சேவகர் சார்லஸ் மார்டின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 400க்கும் மேற்பட்டவர்களுக்கு “Pride Of Puducherry” விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமூக சேவகர் சார்லஸ் மார்டின் னிடம் தாங்கள் பாஜகவின் B-Team என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் யாருடைய B-Teamமும் இல்லை என்று தொடர்ச்சியாக என் செயல்பாடுகள் மூலம் தெரிவித்து வருகிறேன், நான் மக்களுடைய Team மட்டும் தான் என கூறினார்.

மக்களுக்கு நல்லது செய்ய வரும் போது இது போன்ற விஷயங்கள் வருவது சகஜம்தான்,
நாராயணசாமி மக்களுக்காக எதுவும் செய்ததில்லை அவர் தான் பல இடங்களை வாங்கியுள்ளார், அந்த வருமானம் எப்படி வந்தது என்பது கூட தெரியாது.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சி காலத்தில் தீபாவளி பரிசாக ATM ல் எடுக்க முடியாத அளவு பணம் பரிசு தொகையாக கொடுத்துள்ளார்.
அவர்கள் சரி இல்லை என்பதால் தான் மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர், வெறும் 2 இடங்கள் கொடுத்தனர் என கூறினார்,
மேலும் தமிழர் இனத்திற்கே துரோகம் செய்த கட்சி காங்கிரஸ், அதனை நாம் எப்போதும் மறக்க முடியாத, நாட்டில் பேச கூட தகுதி இல்லாத கட்சி.
புதிய புதிய ஊழல் ழகளை செய்து ஊழலுக்கு வழிவகுத்த கட்சி காங்கிரஸ் தான் என்பதும் அனைவருக்கும் தெரியும், எல்லா எல்லாவற்றுக்கும் மேலாக காந்தி என்ற பெயரையே திருடி வைத்துள்ளனர் என கூறினார்,
புதுச்சேரியில் 15 தொகுதிகளில் JCM மக்கள் மன்றம் திறக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் மக்கள் மன்றம் திறக்கப்படும்.
30 தொகுதிகளிலும் போட்டியிடுவது தான் எங்கள் திட்டம் எனவும், நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு மக்களை ஏமாற்றி ஊழல் செய்ய வழியில்லாமல் போய்விடும் என்ற பயத்தில் தான் காங்கிரஸ் கட்சியினர் இப்படி விமர்சித்து வருகின்றனர், அவர்களுக்கு ஊழலை தவிர வேறு ஒன்றும் தெரியாது எனவும் கூறினார்.
ரங்கசாமி மீது தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை, மக்கள் தான் எதுவும் செய்யவில்லை என அவர் மீது அதிருப்தியில் உள்ளனர் என கூறிய சார்லஸ் மார்டின்.
சிங்கப்பூரை போல் புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம்,
கட்சி தொடங்குவதற்கான பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருவதாகவும், எங்கள் செயல்பாடுகளை பார்த்து பல அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் நம்பிக்கை பெற்று எங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளனர், எங்களை தேடி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது உள்ள ஆட்சியாளர்கள் அவர்களின் வேலையை சரியாக செய்வது இல்லை, அதன் காரணமாக என்னை போன்றவர்கள் வருகிறோம் எனவும், மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும், மற்ற நாடுகளை பார்க்கும் போது நம் நாடும் அதுபோல வளர்ச்சி அடைய வேண்டும் என தோன்றுகிறது. அதை நோக்கி தான் நாம் பயணிக்கிறோம் என கூறிய அவர்,
புதுச்சேரியில் தினம் ஒரு கொலை நடக்கிறது, புதுச்சேரிக்கு என்னை அனுப்பவே குடும்பத்தார் பயப்படுகிறார்கள், இருப்பினும் அரசியலுக்காக நான் வரும் போது பவுன்சர்கள் தேவை என கூறிய அவர், புதுச்சேரி அரசியல்வாதிகள் எளிமை என கூறும் நிலையில் 25 ஆண்டுகளாக அவர்கள் டீ கடையில் உட்கார்ந்தும் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்தும் என்ன பயன், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும். வளர்ச்சிக்கு உண்மையாக பாடுபட வேண்டும் என சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கூறினார்.

