இந்தியாசமூகம்சினிமா

ரூ.22 கோடியில் பிரம்மாண்ட வீடு வாங்கிய பிரபல ஹிந்தி நடிகை !

பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே மும்பை கடற்கரை அருகே ஆடம்பர பங்களா ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகை

ஹிந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கோச்சடையான் அனிமேஷன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்து தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். இவர்கள் இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மும்பை பந்த்ரா பகுதியில் 11 ஆயிரத்து 266 சதுர அடியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ரூ.119 கோடிக்கு வீடு வாங்கி இருந்தனர்.

பங்களா வீடு

இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, தனது கணவருடன் சேர்ந்து மும்பை, அலிபாக் என்ற இடத்தில் ஆடம்பர பங்களா ஒன்றை ரூ.22 கோடிக்கு விலைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 18 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்களா வீட்டின் கிரகப்பிரவேசம் சமீபத்தில் நடந்துள்ளது. இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts