தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் தாயார் கட்டமனேனி இந்திரா தேவி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மரணம்
தெலுங்கில் பழம்பெரும் நடிகராக இருப்பவர் கிருஷ்ணா. இவரது மகனும் தெலுங்கில் பிரபல நடிகருமானவர் மகேஷ் பாபு. இவரது தாயார் கட்டமனேனி இந்திரா தேவி கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி கட்டமனேனி இந்திரா தேவி உயிரிழந்தார். இவரின் உடல் அஞ்சலிக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பத்மாலயா ஸ்டுடியோவில் வைக்கப்பட்டது .
மேலும், நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் இந்திராதேவியின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.