Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»T20 WC 2026: தென் ஆப்பிரிக்கா – நியூஸிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை

T20 WC 2026: தென் ஆப்பிரிக்கா – நியூஸிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை

March 4, 20263 Mins Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென் ஆப்பிரிக்கா – நியூஸிலாந்து அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன.

எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இது​வரை தோல்​வியை சந்​திக்​காத அணி​யாக வலம் வரு​கிறது. லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​கள், சூப்​பர் 8 சுற்​றில் 3 ஆட்​டங்​கள் என தொடர்ச்​சி​யாக 7 ஆட்​டங்​களில் வெற்றி கண்​டிருந்​தது.

வலு​வான டாப் ஆர்​டர், நடு​வரிசை பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்​சில் பல்​வேறு மாறு​பாடு​களை கொண்​டிருப்​பது அணி​யின் பலமாக உள்​ளது. பேட்​டிங்​கில் 175.16 ஸ்டிரைக் ரேட்​டுடன் 268 ரன்​கள் குவித்​துள்ள எய்​டன் மார்க்​ரம் பவர்​பிளே​வில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​ளக்​கூடிய​வ​ராக உள்​ளார். நடப்பு தொடரில் 3 அரை சதங்​கள் விளாசி உள்ள அவரது அதி​கபட்ச ஸ்கோர் 86* ஆக உள்​ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​படக்​கூடும்.

இதே​போன்று 171.42 ஸ்டிரைக் ரேட்​டுடன் 228 ரன்​கள் சேர்த்​துள்ள ரியான் ரிக்​கெல்​டன், 172 ரன்​கள் எடுத்​துள்ள குயிண்​டன் டி காக் ஆகியோ​ரும் டாப் ஆர்​டரில் அதிர​யாக விளை​யாடக்​கூடிய​வர்​கள். நடு​வரிசை​யில் டேவிட் மில்​லர், டெவால்ட் பிரே​விஸ் ஆகியோர் தாக்​குதல் ஆட்​டம் தொடுக்​கும் திறன் கொண்​ட​வர்​கள். இவர்​களை தொடர்ந்து டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், மார்கோ யான்​சன், கார்​பின் போஷ் ஆகியோ​ரும் பேட்​டிங்​கில் பலம் சேர்க்​கக்​கூடிய​வர்​கள்.

வேகப்​பந்து வீச்​சில் காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி, மார்கோ யான்​சன், கார்​பின் போஷ் ஆகியோர் வலு​வான செயல் திறனை வெளிப்​படுத்​தக்​கூடிய​வர்​கள். இதில் லுங்கி நிகிடி நடப்பு தொடரில் வேகம் குறைந்த பந்​துகள், வைடு யார்க்​கர்​கள், வேகம் குறைந்த லெக் கட்​டர்​கள் என பல்​வேறு மாறு​பாடு​களு​டன் எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு நெருக்​கடி கொடுத்து வரு​கிறார்.

இதையும் படிக்க :  பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு

இதனால் நியூஸிலாந்து அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு லுங்கி நிகிடி சவால்​தரக்​கூடும். சுழற்​பந்து வீச்​சில் கேசவ் மகா​ராஜ், ஜார்ஜ் லின்டே ஆகியோ​ருடன் பகுதி நேர சுழற்​பந்து வீச்​சாள​ரான எய்​டன் மார்க்​ர​மும் பலம் சேர்க்​கக்​கூடும்.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி லீக் சுற்​றில் 3 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது. தொடர்ந்து சூப்​பர் 8 சுற்​றில் பாகிஸ்​தானுடன் மோத இருந்த ஆட்​டம் மழை காரண​மாக ரத்​தானது. இலங்கை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் வெற்றி கண்ட நிலை​யில் இங்​கிலாந்து அணி​யிடம் தோல்வி அடைந்​தது. எனினும் நிகர ரன் ரேட் காரண​மாக பாகிஸ்​தான் அணியை தொடரில் இருந்து வெளி​யேற்றி அரை இறுதி வாய்ப்பை பெற்​றிருந்​தது நியூஸிலாந்து அணி.

டாப் ஆர்​டரில் டிம் ஷெய்​பர்ட், ஃபின் ஆலன் ஜோடி அதிரடி தொடக்​கம் அமைத்​துக் கொடுப்​பவர்​களாக உள்​ளனர். ஆனால் நடு​வரிசை​யில் கிளென் பிலிப்​ஸ், ரச்​சின் ரவீந்​தி​ரா, டேரில் மிட்​செல், மார்க் சாப்​மேன் ஆகியோரிடம் இருந்து இது​வரை பெரிய அளவி​லான தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. ஒரு சில ஆட்​டங்​களில் மிட்​செல் சாண்ட்​னர் பின்​வரிசை​யில் அதிரடி​யாக விளை​யாடி அணி​யின் வெற்​றிக்கு உதவி​யிருந்​தார்.

இன்​றைய ஆட்​டம் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது என்​ப​தால் நடு​வரிசை பேட்​ஸ்​மேன்​கள் பொறுப்​புடன் செயல்​படு​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பந்​து​வீச்​சில் தொடக்க ஓவர்​களில் மேட் ஹென்​றி, லாக்கி பெர்​குசன் அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். சுழலில் மிட்​செல் சாண்ட்​னர் நடப்பு தொடரில் ஓவருக்கு சராசரி​யாக 6.35 ரன்​களையே விட்​டுக்​கொடுத்​துள்​ளார். மேலும் 9 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​யுள்ள ரச்​சின் ரவீந்​தி​ரா, கிளென் பிலிப்​ஸ், கோல் மெக்​கோன்சி ஆகியோ​ரும் பலம் சேர்க்​கக்​கூடும்.

இதையும் படிக்க :  மே.இ.தீவுகளை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா! அரை இறுதிக்கு முன்னேற்றம்!

நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்​பிரிக்கா – நியூஸிலாந்து அணி​கள் 2-வது முறை​யாக மோத உள்​ளன. இந்த இரு அணி​களும் லீக் சுற்​றில் மோதி இருந்​தன. இதில் 176 ரன்​கள் இலக்கை துரத்​தி​யிருந்த தென் ஆப்​பிரிக்க அணி 17 பந்​துகளை மீதம் வைத்து 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. இந்த தோல்விக்கு நியூஸிலாந்து அணி பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

போட்டி நடை​பெறும் ஈடன் கார்​டன் மைதானம் பேட்​டிங்குக்கு சாதக​மான​தாக இருக்​கும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது. முதலில் பேட் செய்​யும் அணி 200 ரன்​களுக்கு மேல் குவிக்க முயற்​சிக்​கக்​கூடும்.

கடந்த 1-ம் தேதி இங்கு நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி 196 ரன்​கள் இலக்கை வெற்​றிகர​மாக துரத்​தி​யிருந்​தது. பனிப்​பொழிவு இருக்​கும் என்​ப​தால் டாஸை வெல்​லும் அணி பீல்​டிங்கை தேர்வு செய்​யவே அதிக வாய்ப்பு உள்​ளது. இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி 8-ம் தேதி நடை​பெறும் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும்.

தென் ஆப்​பிரிக்கா ஆதிக்​கம்

டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக தென்​ ஆப்​பிரிக்​கா அணி 5 முறை மோதி உள்​ளது. இதில்​ அனைத்​தி​லும்​ தென்​ ஆப்​பிரிக்​க அணியே வெற்றி கண்டிருந்தது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமுட்டை விலை வீழ்ச்சி
Next Article மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.