Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு

March 4, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாநிலங்​கள​வைத் தேர்​தலுக்​கான வேட்பு மனுத் தாக்​கல் நாளை மார்ச் 5-ம் தேதி மாலை​யுடன் நிறைவு பெறுகிறது. இது​வரை 3 சுயேச்​சைகள் மட்​டுமே மனுத் தாக்​கல் செய்​துள்​ளனர்.

நாடு முழு​வதும் 37 மாநிலங்​களவை எம்​.பி.க்​களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலை​யில், மார்ச் 16-ம் தேதி தேர்​தல் நடத்த தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது. தமி​ழ​கத்​தில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, கனி​மொழி என்​.​வி.என்​,சோ​மு, என்​.ஆர்​.இளங்​கோ, அந்​தி​யூர் செல்​வ​ராஜ், அதி​முகவைச் சேர்ந்த மு.தம்​பிதுரை, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் ஆகிய 6 பேரின் பதவிக் கால​மும் முடிவடைகிறது.

இந்த 6 இடங்​களுக்கு புதிய உறுப்​பினர்​களைத் தேர்வு செய்​வதற்​கான வேட்பு மனுத் தாக்​கல் கடந்த பிப்​.26-ல் தொடங்​கியது. மனுத் தாக்​கல் செய்ய நாளை மார்ச் 5-ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 6-ம் தேதி வேட்பு மனுக்​கள் பரிசீலிக்​கப்​படும்.

மனுக்​களை வாபஸ் பெற மார்ச் 9-ம் தேதி இறுதி நாளாகும். அன்று இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். போட்டி இருப்​பின் மார்ச் 16-ம் தேதி தேர்​தல் நடை​பெறும்.

இந்​நிலை​யில், நேற்று வரை சேலம், மேட்​டூரைச் சேர்ந்த தேர்​தல் மன்​னன் என்று அறியப்​படும் கு.பத்​ம​ராஜன், திருச்சி குழு​மணி​யைச் சேர்ந்த கே.பி.எம்​.​ராஜா, சென்னை அம்​பத்​தூரைச் சேர்ந்த டி.கே.மேஷாக் கிரு​பாகரன் ஆகிய 3 சுயேச்சை வேட்​பாளர்​கள் மனுத் தாக்​கல் செய்​துள்​ளனர்.

இதையும் படிக்க :  இனி கனடா சந்தையில் இந்திய வாழைப்பழங்கள் மற்றும் பேபி கார்ன்கள் கிடைக்கும்!

இந்த 6 மாநிலங்​களவை இடங்​களை பொறுத்தவரை திமுக தரப்​புக்கு 4, அதி​முக​வுக்கு 2 இடங்​கள் கிடைக்​கும். இது​வரை, திமுக, அதி​முக தரப்​பில் வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட​வில்​லை. இன்​றைக்​குள் வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட்டு நாளை இறுதி நாளில் மனுத் தாக்​கல் செய்​யப்​படலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

திமுகவைப் பொறுத்த வரை​யில், கட்​சி​யின் மூத்த நாடாளு​மன்​றக் குழுத் தலை​வ​ராக இருக்​கும் திருச்சி சிவாவுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​படலாம் எனத் தெரி​கிறது. மற்​றொரு இடத்தை திமுக செய்​தித் தொடர்​பாளர் கான்​ஸ்​டன்​டைன் ரவீந்​திரனுக்கு வழங்க முதலில் முடிவு செய்​யப்​பட்​டது.

மீத​முள்ள 2 இடங்​களில் ஒன்றை தேமு​திக பொருளாளர் சுதீஷுக்​கும், மற்​றொன்​றைக் காங்​கிரஸுக்​கும் வழங்க திமுக தலைமை திட்​டம் வைத்​திருந்​தது. ஆனால் காங்​கிரஸோ, “எங்​களுக்கு மாநிலங்​களவை சீட் வேண்​டாம்; அதற்​குப் பதில் கூடு​தல் சட்​டமன்​றத் தொகு​தி​கள் வேண்​டும்” என்​ப​தில் பிடி​வாத​மாக இருக்​கிறது.

இதனால், கான்​ஸ்​டன்​டைனுக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுத்​து​விட்​டு, அவர் இடத்​தை​யும் சேர்த்து 2 இடங்​களைக் காங்​கிரஸுக்கே வழங்கி சரி கட்​டலாம் என திமுக தலைமை ஆலோ​சித்​தது. அதற்​கும் காங்​கிரஸ் உடன்​பட​வில்லை என்​ப​தால் கூட்​ட​ணி​யில் குழப்​ப​மான சூழலே நீடிக்​கிறது.

இதையும் படிக்க :  திரிணமூல் காங்கிரஸின் திமிர்பிடித்த அரசியலை தோற்கடிப்போம்: பிரதமர் மோடி சபதம்

அதி​முக​வில் தம்​பிதுரைக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கு​வது உறு​தி​யாகி​விட்​டது. மற்​றொரு இடத்​துக்கு அன்​புமணி மற்​றும் ஜி.கே.​வாசன் இடையே பலப்​பரீட்சை நடந்து வரு​கிறது.

“கடந்த முறை அதி​முக தயவில் சீட் வாங்​கி​விட்டு பாஜக பக்​கம் சென்​று​விட்​டார் வாசன். எனவே, அவருக்கு மீண்​டும் தரமுடி​யாது” என அதி​முக தரப்பு கறா​ராகச் சொல்​லி​விட்​டது. மறு​பக்​கம், ‘‘அ​தி​முக சீட் கொடுத்​தா​லும் உங்​களுக்கு உண்​மை​யாகவே இருந்​தேன்; எனக்கு மீண்​டும் சீட் வாங்​கித் தாருங்​கள்’’ என்று பாஜக​விடம் வாசன் வலி​யுறுத்தி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. இதற்​கிடை​யில், ‘‘என் தந்​தையை பகைத்​து​விட்டு உங்​களு​டன் கைகோர்த்​திருக்​கிறேன். எனவே எனக்​கு​தான் சீட் வேண்​டும்’’ என்று அன்​புமணி பிடி​வாதம் காட்டி வரு​கி​றார்.

இதற்​கிடை​யில், முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார், ‘‘கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு எம்​.பி. சீட் கொடுக்க வேண்​டாம். அவர்​கள் கடைசி​யில் நம்மை கழற்றி விட்​டு​விடு​வார்​கள். அதற்கு பதில் என் மகன் ஜெய​வர்​தனுக்கு சீட் கொடுங்​கள். கடந்த தேர்​தலில் அவர் தோற்​று​விட்​டார். இந்த முறை அவரை நாடாளு​மன்​றத்​துக்கு அனுப்ப விரும்​பு​கிறேன்’’ என்று எடப்​பாடி பழனி​சாமி​யிடம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதனால் அதி​முக​வின் 2-வது சீட் யாருக்கு என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleT20 WC 2026: தென் ஆப்பிரிக்கா – நியூஸிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை
Next Article பிரதமர் மோடி இன்ஸ்டாவை அடுத்து யூடியூபிலும் சாதனை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.