Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, August 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»13 ஆண்டுகளாக ‘கோமா’வில் உள்ள இளைஞர் கருணை கொலை – கண்ணீர் மல்க தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

13 ஆண்டுகளாக ‘கோமா’வில் உள்ள இளைஞர் கருணை கொலை – கண்ணீர் மல்க தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

March 11, 20262 Mins Read48 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

13 ஆண்டுகளாக படுக்கையில் கோமா நிலையில் உள்ள 32 வயதான இளைஞரை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரீஷ் ராணா (வயது 32). இவர் கடந்த 2013- ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். தங்கும் விடுதியில் தங்கி பயின்று வந்த ஹரிஷ் ராணா, 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அத்துடன், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

அவரை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுமார் 13 ஆண்டுகளாக வீட்டிலேயே ஹரீஷ் ராணாவை வைத்து அவரது பெற்றோர் பராமரித்து வருகின்றனர். ஹரீஷ் ராணாவிற்கு உத்தரப்பிரதேச அரசு, மருத்துவர்கள், பிஸியோதெரபிஸ்ட்டுகளை வைத்து நாள்தோறும் அவரது வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்து வந்தது.

இதையும் படிக்க :  நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு

இந்த நிலையில், தங்கள் மகனை இந்த சூழலில் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. அவர் மிகவும் அவதிப்படுகிறார். எனவே, அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ஹரீஷின் பெற்றோர் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, ஜனவரி 13-ம் தேதி ஹரீஷின் குடும்பத்தினரை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேரில் அழைத்துப் பேசினர். அப்போது அவரது குடும்பத்தினர், ஹரீஷ் நாள்தோறும் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. அவர் படும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அவரை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையும் படிக்க :  இந்தியாவில் கொரோனா நிலவரம் - மத்திய சுகாதாரத்துறை அறிக்கை !

இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்ணியமாக மரணமடைவதும் அடிப்படை உரிமை தான் என்று கூறி ஹரீஷ் ராணாவின் கருணை கொலைக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது நீதிபதிகள் இருவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

நாட்டிலேயே கருணை கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது இதுவை முதல்முறை. ஏற்கனவே, கடந்த 2018, 2023 ஆம் ஆண்டுகளில் ஹரீஷை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஹரீஷுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை உடனடியாக நிறுத்தப்பட்டு அவர் இயற்கையாக மரணிக்கவுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகோடை காலத்தில் வாக்கிங் செல்ல சிறந்த நேரம் எது? 10k இலக்கை அடைய இதை தெரிஞ்சுக்கோங்க!
Next Article மேற்காசிய நெருக்கடி: ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,896 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,091 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,896 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,091 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.