Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரட்டை சூப்பர் ஓவர் போட்டி: ஆச்சரியப்படுத்தும் வரலாறு!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரட்டை சூப்பர் ஓவர் போட்டி: ஆச்சரியப்படுத்தும் வரலாறு!

February 11, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியானது புதிய வரலாறை படைத்திருந்தது. ஏனெனில் இந்த போட்டியின் முடிவை எட்ட இரண்டு சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டன.

சர்வதேச கிரிக்கெட்டில் பலமுறை போட்டியின் வெற்றியை தீர்மானிக்க இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றிருந்தாலும், டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சூப்பர் ஓவர்களை கொண்ட போட்டிகள் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.

இதற்கு முன், கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் போட்டியின் முடிவை எட்ட இரண்டு சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டன. ஏனெனில் அந்த இன்னிங்ஸில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. பின்னர் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியும் 212 ரன்களை சேர்க்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றனர்.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணியும் சூப்பர் ஓவரில் 15 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் கடைசி பிடிக்கப்பட்ட நிலையில், அதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 11 ரன்களை சேர்க்க, அடுத்து பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது.

இதையும் படிக்க :  இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டோம் - பாகிஸ்தான் அறிவிப்பு; பறந்து வந்த எச்சரிக்கை

கடந்தாண்டு நடைபெற்ற நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியின் முடிவை எட்ட ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் 152 ரன்களை எடுத்து ஆட்டத்தை சமன் செய்திருந்தன. பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ஸ்கோரை எடுக்க, இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது.

அதிலும் இரு அணியிம் ஒரே ஸ்கோரை எடுத்தனர். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியின் முடிவானது மூன்றாவது சூப்பர் ஓவருக்கு சென்றது. இறுதியில் மூன்றாவது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணியானது வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :  விராட் கோலியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்

இந்த பட்டியலில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான் போட்டியும் இணைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 187 ரன்களை எடுத்தது. அதன்பின் இலக்கை விராட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் ஆல் அவுட்டான நிலையிலும் 187 ரன்களை சேர்த்து போட்டியை சமன் செய்தது.

இதனால் போட்டியின் முடிவை எட்டுவதற்கு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 17 ரன்களை எடுத்தது. பின்னர் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியும் 17 ரன்களை எடுக்க, ஆட்டத்தின் முடிவு இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது.

இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 23 ரன்களைச் சேர்த்த நிலையில், அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 19 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்றது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடி20 உலகக் கோப்பை 2026: எல்லிஸ், ஜாம்பா பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது அயர்லாந்து
Next Article ”அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ – முன்னாள் அமைச்சர் தங்கமணி

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.