சீமான் அவர்கள் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற கூட்டத் தொடரில் பொது மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்தார்.
பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த சீமான், ஆம்புலன்ஸில் முதலுதவி அளித்த பின் தெளிவு பெற்றார்!#Seeman #PesuTamizhaPesu #பேசுதமிழாபேசு pic.twitter.com/YoTpJHpm9D
— Pesu Tamizha Pesu (@pesutamizhapesu) April 2, 2022
ஏப்ரல் 2 அன்று சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற கூட்டத் தொடரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களிடமும், கட்சியினரிடமும் பெரும் பதற்றம் நிலவியது. இணையத்தில் இச்செய்தி வெளியாகி தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய நாம் தமிழர் கட்சித் தொண்டர்களிடம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து சீமான் அவர்களின் உடல்நலம் குறித்து நலம் விசாரிக்கப்பட்டும், அவர் உடல் நிலை குணமாகி மீண்டும் அரசியல் களத்திற்கு வர வேண்டும் என்றும் இணையத்தில் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றன.
விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு இணைகிறேன்.
பேரன்பின் நெகிழ்வோடு,
உங்கள்
சீமான்https://t.co/UrabRSdIgT
— சீமான் (@SeemanOfficial) April 3, 2022
இதை தொடர்ந்து சீமான் அவர்கள் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவிலிருந்து தற்போது முழுமையாக மீண்டுவந்து, முழு உடல்நலம் பெற்று விட்டேன். உடல் நலிவுற்றபோது எனக்கு உளவியல் துணையாக நின்ற அத்தனைப்பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியினையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும்,
விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு இணைகிறேன். பேரன்பின் நெகிழ்வோடு, உங்கள் சீமான் என்று பதிவு செய்துள்ளார்.
எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்!@CMOTamilnadu @mkstalin
— சீமான் (@SeemanOfficial) April 3, 2022
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ,சீமான் அவர்கள் உடல் நலம் குறித்து அலைபேசியில் சீமானிடமே விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.சீமான் அவர்களின் அரசியல் பயணத்தை நீங்கள் எப்படி பார்க்குறீங்க..?