இந்தியாகல்வி

ஹெலிகாப்டர்சவாரி போக ரெடியா? 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிடைத்த ஆஃபர் !

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி செல்ல அரசே ஏற்பாடு செய்யும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கடந்த வருடம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. கடந்த வருடம் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அரசு அனைவரையும் ஆல்பாஸ் செய்தது. எனவே முதலிடம் பிடித்தவர் பட்டியலை வெளியிட வில்லை. சத்தீஸ்கர் மாநில பொது தேர்வில் பாஸ் செய்வதற்கு குறைந்தபட்சம் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும்.

ஹெலிகாப்டர் சவாரி

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர், பல்ராம்பூர் பகுதியில் மக்களை சந்தித்த பின் செய்தளர்களிடம் பேசினார். அப்போது, ’10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடத்தை பெரும் மாணவர்களுக்கு அரசு சார்பாக ஹெலிகாப்டர் சவாரி பரிசாக வழங்கப்படும்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. வானத்தில் பறப்பதற்கு அனைவருக்கும் ஆசை இருக்கும். இந்த பயணத்தின் போது குழந்தைகள் வாழ்க்கையில் உயர பறக்க வேண்டும், லட்சியங்களை அடைவதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். மேலும், மாணவர்கள் இத்தகைய தனித்துவ பரிசை பெறும்போது நிச்சயம் உத்வேகம் அடைவர்’ என்று கூறினார்.

 

Related posts