சினிமா

புகழ்தான் பெஸ்ட்; குவியும் நட்சத்திரங்களின் பட வாய்ப்புகள்!

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த சேட்டைகளும், டைமிங் காமெடியிலும் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியதோடு ஏராளமான படவாய்ப்புகளையும் பெற்றுத்தந்துள்ளது.

குவியும் பட வாய்ப்புகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான திரைப்பட வாய்ப்புகளை அள்ளி குவிக்கிறார் புகழ். கோலிவுட்டில் ஏராளமான படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைந்து நடித்தும் வருகிறார்.சமீபத்தில் இவரது நடிப்பில் வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்கள் வெளிவந்தன. சிவகார்த்திகேயனின் டான், அருண் விஜய்யின் யானை போன்ற படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அஸ்வின் மற்றும் ஷிவாங்கியும் திரைப்பட வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 3
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது வெளியாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி முழுமையாக கலந்துக்கொள்கிறார். புகழ், படவாய்ப்பு கிடைத்துள்ளதின் காரணமாக அவ்வப்போது கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு புகழ் பல்வேறு சேட்டைகளையும் காமெடிகளையும் தெறிக்கவிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்த வாரமும் இவர் பங்கேற்கவுள்ள நிலையில் இதுகுறித்த ப்ரமோ விஜய் டிவியில் வெளியாகியுள்ளது.
இந்த ப்ரமோவில் புஷ்பா படத்தின் அல்லு அர்ஜுனின் உடல் பாவனையோடு புகழ் செய்யும் சேட்டைகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை குவித்துள்ளது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.