அரசியல்இந்தியாசமூகம்

ஞானவாபி மசூதி விவகாரம் பற்றி சர்ச்சை பதிவை முகநூலில் பதிவிட்ட பேராசிரியர் கைது !

ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து சர்ச்சையானா கருத்தை முகநூலில் பதிவிட்டதால் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சர்சையை கிளம்பியுள்ளது.

ஞானவாபி மசூதி விவகாரம்

வாரணாசி பகுதியில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோயில் அமைந்துள்ளது. அதனருகே ஞானவாபி மசூதி (Gyanvapi Mosque) அமைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில், ஞானவாபி மசூதி வளாக சுவரில் அம்மன் சிலை இருப்பதாகவும்,  இந்து சமயம் சார்ந்த குறிப்புகள் மசூதிக்குள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே மசூதிக்கு இந்துக்கள் சென்று இந்து கடவுள்களை வழிபட அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

வழக்கு ஆணையர் தலைமையில் தனிக்குழு அமைத்து, காவல்துறை, இராணுவ பாதுகாப்புடன் மூன்று நாட்கள் ஆய்வு நடைபெற்றது. அதன் முடிவில் மசூதி வளாகத்திற்குள் ‘சிவலிங்கம்’ கண்டெடுக்கப்பட்டது நீதிமன்றம் சிவலிங்கம் எடுக்கப்பட்ட இடத்தை ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதன் பெயரில் அந்த இடத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து நாடு முழுவதும் பொது மக்களும், அரசியல் தலைவர்களும் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒருவர் பதிவிட்ட கருத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

புகார்

டெல்லியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் பேராசிரியரான ரத்தன் லால் முகநூலில் ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்டுள்ளதாக புகார் அளித்தார். அந்த புகாரில், ‘ரத்தன் லாலில் கருத்து இரு பிரிவினரிடையே சண்டையை தூண்டும் வகையில் உள்ளதாகவும். சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் உள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஞானவாபி விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது மிகவும் உணர்வுப்பூர்வமானப் பிரச்னையாக அணுகப்பட வேண்டும். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். அந்த புகாரின் அடிபட்டையில் பேராசிரியர் ரத்தன் லால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து சுதந்திரம் உண்டு

இந்நிலையில், ‘இந்தியாவில் யாரைப் பற்றியும் அல்லது எதைப் பற்றியும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. நாம் சொல்லுகின்ற கருத்து மற்றொருவருக்கு ஏற்புடையதாக இருக்காது. அதேசமயத்தில் புண்படும் வகையிலும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே இது ஒன்றும் புதிது கிடையாது. ஒரு வரலாற்றுத் துறை பேராசிரியராக சில விஷயங்களை படித்துத் தெரிந்து கொண்ட பிறகே என் கருத்தை முகநூலில் பதிவிட்டேன். அந்தப் பதிவில் வார்த்தைகளை மிகவும் கவனமாகவே பயன்படுத்தியுள்ளேன். எனவே எனது கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்’ என்று பேராசிரியர் ரத்தன் லால் கூறியுள்ளார்.


கருத்து கூறியதற்காக பேராசியரை கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts