துபாய் இளவரசர் பொதுமக்களிடம் இயல்பாக பழகுவது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
துபாய் இளவரசர்
துபாயின் இளவரசராக 2008 முதல் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் பதவிவகித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்குபவர். கடந்த 2020ல் தனது பென்ஸ் சொகுசு காரில் குருவி ஒன்று கூடு கட்டியதற்காக, அது குஞ்சு பொறிக்கும் வரை அந்த காரை குருவிக்காகவே விட்டுக்கொடுத்து சமூக வலைத்தளத்தில் பாராட்டைப் பெற்றது. தற்போது விடுமுறையை கழிக்க துபாய் இளவரசர் நண்பர்களுடன் லண்டன் சென்றுள்ளார்.
லண்டனில் நம்மூர் என்ற பகுதியில் தனது நண்பருடன் டியூப் ரயிலில்டியூப் ரயிலில்டியூப் ரயிலில் உட்கார இடமின்றி நின்றுகொண்டு பயணித்தார். ‘இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது’ என தனது நண்பருடன் எடுத்தப் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், டியூப் ரயிலில் பயணித்தவர்களுக்கு உடன் பயணிப்பவர் துபாய் இளவரசர் என தெரிந்தாலும் அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டும், விரும்பப்பட்டும் வருகிறது.