ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
நினைவு அஞ்சலி
கடந்த ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்காக இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. ஷின்சோ அபே மற்றும் இந்திய பிரதமர் மோடி நல்ல நட்புறவில் இருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் மோடி தனது இரங்கல் செய்தியில் பாசமிகு நண்பர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே ஜப்பான் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதற்காக நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசினார்.

