வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் அமைக்கும் கூட்டணி கவலைப்படும் வகையில் இருக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக ராமதாஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மூன்றாவது நாளாக நேர்காணல் நடைபெற்றது. மூன்று கட்டங்களாக நடைபெறும் நேர்காணலில் இறுதி நாளான இன்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிர்வாகிகள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:
கூட்டணி என்றால் அது வெற்றி கூட்டணியாக தான் இருக்க வேண்டும். வெற்றி கூட்டனியை அமைக்க வேண்டும். நல்ல வெற்றி கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை பொதுக்குழு எனக்கு வழங்கியுள்ளது. உங்களின் ஆணைக்கிணங்க, வெற்றிக் கூட்டணியை அமைத்து தானே ஆகணும். நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால் நான் அமைக்கும் கூட்டணி கவலைப்படும் வகையில் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

