பெட்ரோல், டீசல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று 132-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மிக நீண்ட காலம் நீடித்தன. கரோனா காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த உலகமும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்களால் பிரச்சினைகள் தொடர்கின்றன.

