இயக்குனர் வெற்றிமாறன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடும் கலைத்திருவிழா நடைபெற்றது. இயக்குனர் வெற்றிமாறன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் ‘ திராவிட இயக்கம், சினிமாவை கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என்று உணர்த்துகின்றனர். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது’ என கூறினார்.
இயக்குனர் பேரரசு
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பேரரசு, ‘இந்து மக்களை இழிவுப்படுத்துவதை சிலர் ஒரு வேலையாகவே செய்து வருகிறார்கள். ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா? இல்ல இஸ்லாமியரா?’ என கேள்வி எழுப்பினார்.