உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் இன்று வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனை
2023-2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஓய்வின்றி பணியாற்றி வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு எரிச்சலுடன், காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவர் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.