சினிமாவெள்ளித்திரை

பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகிறது டான் திரைப்படம்; அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13ம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் டான். தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டான் படம்

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கிய படம் டான். சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், சிவாங்கி, பாலசரவணன், மிர்ச்சி விஜய், ஆதிரா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 13ம் தேதி பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

Don - Official Trailer | Sivakarthikeyan, Priyanka Mohan | Anirudh | Cibi - YouTube

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘டாக்டர்’ போலவே மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது. இதனால் குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக மாறி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நகைச்சுவை, டான்ஸ், தனக்கே உரித்தான அப்பா செண்டிமெண்ட் என்று டான் படத்தில் கலர்புல்லாக கலக்கியிருந்தார் சிவா.

சினிமாவின் டான்

தமிழகத்தில் சுமார் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட டான் படம் முதல் நாள் தமிழகத்தில் 8 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன்தொடர்ச்சியாக இரண்டாம் நாளில் 10 கோடியே 30 லட்சம் ரூபாயும், மூன்றாம் நாளில் 11 கோடியே 18 லட்சம் ரூபாயும் வசூல் செய்தது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது.

தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

இதனால் படத்தின் இணை தயாரிப்பாளரான லைக்கா நிறுவனமும், படத்தை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். இந்த வெற்றியை சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. உதயநிதி சொன்னது போல், சிவகார்த்திகேயன் சினிமாவின் டான் என்பதை நிரூபித்துள்ளார் என்று அவரின் ரசிகர்கள் கூறிகிறார்கள்.

ஓடிடி வெளியிடு

இந்நிலையில், டான் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. பொதுவாக படங்கள் திரையரங்கில் வெளியாகி 1 மாதத்தில் ஓடிடியில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் டான் திரைப்படம் ஜூன் 10ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Related posts