Editor's Picksதமிழ்நாடு

நீட் தேர்விலிருந்து நாடு விடுதலை பெரும் ; முதல்வர் மு.க ஸ்டாலின்!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்விலிருந்து விரைவில் நாடு விடுதலை பெறுமென தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டதன் காரணமாக நாடு முழுவதிலுமுள்ள ஏழை – எளிய, விளிம்புநிலை மாணவர்கள் அதிகப்படியாக பாதிக்கப்படுவதாக கூறி, நீட் நுழைவுத்தேர்வினை ரத்து செய்திட வேண்டுமென தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டுவருகிறது திமுக. அதேபோல், தமிழக சட்டப்பேரவை தேர்தல் சமயத்திலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் நுழைவுத்தேர்வினை ரத்து செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோமென திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் நுழைவுத்தேர்வினை ரத்து செய்திட வேண்டுமெனக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், முதன்முறை ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார். அதனைத்தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறை நீட் தேர்வை ரத்து செய்திடக்கோரும் தீர்மானத்தை அதிரடியாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு.

சட்டமுறைமைகளின் படி, மாநில அரசால் இரண்டாவது முறையாகவும் இயற்றி அனுப்பட்ட சட்டமன்ற தீர்மானத்தை ஆளுநரால் திருப்பியனுப்ப முடியாது. அதனை குடியரசுத்தலைவருக்கு அவர் அனுப்பியாக வேண்டும்.

இந்நிலையில், நேற்று ஆளுநரை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நீட் ரத்து தொடர்பான தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டுமென ஆளுநரை வலியுறுத்தியுள்ளார். மேலும், மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்விலிருந்து விரைவில் நாடு விடுதலை பெறுமென தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

Related posts