விஜய் பட பாடல்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இத்திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ அண்மையில் வெளியானது.
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ என்ற முதல் பாடல் இன்று மாலை 5.30 மணிக்க்கு வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிஉள்ளார். மேலும், இன்று தான் எனக்கு தீபாவளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.