அணைப் பாதுகாப்பு சட்டம் 2021-ன் கீழ் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பேரிடர்களைத் தடுப்பது தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் (NDSA) இதுவரை கண்காணித்து வந்தது.
இந்நிலையில் இன்று வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையை தற்காலிகமாக கவனிப்பதற்காக மறுசீரமைக்கப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட மேற்பார்வைக் குழு ஒன்று அமைக்கப்படும். கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர், கருவிகள் மற்றும் அணை பாதுகாப்பு குறித்து நன்கு அறிந்த இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு வாரங்களில் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அணையை குறித்து புதிதாக பரிசீலனை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் இந்த குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழுவின் தளவாட மற்றும் நிதித் தேவைகளுக்கு இணங்குவதற்கு இரு மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார்கள். தவறினால் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள மேற்பார்வைக் குழு, உத்தரவிற்கு இணங்க மே 11-ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.