சினிமா

இன்று பிறந்தநாள் காணும் நித்யா மேனன்; கடந்து வந்த பாதைபற்றி குட்டி அலசல்!

நித்யா மேனன் 1988-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிறந்தார். மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள இவர் பாடகியாகவும் அறியப்பட்டவர். சிறந்த நடிப்பிற்காக மூன்று பிலிம்பேர் விருதுகள் மற்றும் இரண்டு நந்தி விருதுகள் என பல பாராட்டுகளைப் பெற்று ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன் தனது எட்டு வயதில் ஆங்கிலத் திரைப்படமான தி மங்கி ஹூ டூ மச் (1998) என்ற திரைப்படத்தில் தபுவின் தங்கையாக நடித்தார். 2006 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான 7 ஓ’ க்ளாக் திரைப்படத்தில் துணை வேடத்தில் தோன்றி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அவர் மலையாளத்தில் ஆகாஷ கோபுரம் (2008), மற்றும் தெலுங்கில் முன்னணி கதாப்பாத்திரங்களில் அறிமுகமானார். அல மாதிரிந்தி (2011) மற்றும் தமிழில் நூற்றெண்பது (2011) மற்றும் 2019 இல், மிஷன் மங்கல் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானவர்.ஹிந்தியில் 2016-ல் அமிதாப் பச்சன், டாப்சீ இணைந்து நடித்த பிங்க் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார் இவர். தெலுங்கு ரீமேக்கில் பீம்லா நாயக் என எடுக்கப்பட்டது. இதில் கதாநாயகனாக பவன் கல்யாண் மற்றும் முக்கிய கதாப்பாத்திரமாக நித்யா மேனன் இடம் பெற்றுள்ளனர். இப்படமானது 2022 பிப்ரவரி 25-ம் தேதி திரைக்கு வந்தது.

தமிழில் நடிகர் அஜித், வித்யா பாலன், பிக் பாஸ் அபிராமி இணைந்து நடித்த நேர்கொண்ட பார்வை மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை தெலுங்கில் பீம்லா நாயக் என எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று பிறந்தநாள் காணும் நித்யா மேனனுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே!

 

Related posts