விளையாட்டு

குஜராத் அணியின் தொடர் வெற்றியை தடுக்கும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ்!

குஜராத் அணியின் தொடர் வெற்றியை தடுக்குமா பஞ்சாப்?!

இன்று நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இவ்விரு அணிகள் மோதும் போட்டியானது இந்திய நேரப்படி 7.30 மணியளவில் தொடங்கும்.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் அணி இதுவரை தான் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பெற்று புள்ளிபட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்ங்களை கொண்ட அணியாக பஞ்சாப் திகழ்கிறது. கேப்டன் மயங்க அகர்வால் மற்றும் தவான் அணிக்கு நிலையான தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர்.

பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன், ஓடின் ஸ்மித் எதிரணி பந்துவீச்சாளர்க்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றனர். தமிழக வீரரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஷாருக்கான் கிடைக்கும் வாய்ப்பை தவறவிடுகிறார். பந்துவீச்சில் நட்சத்திர பந்துவீச்சாளரான ரபாடா அணியில் இணைந்ததிருப்பது அணிக்கு கூடுதல் பலம். இளம் வீரரான அர்ஷிதீப் சிங்கின் பந்துவீச்சு அச்சமூட்டும் விதமாக உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ்

டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டிய தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4 -ஆம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியை போலவே டைட்டன்ஸ் அணியும் அதிரடி பேட்ஸ்மேன்ங்களை கொண்டு உள்ளது. அணியின் துவக்க ஆட்டக்காரரான கில் ஃபார்மிற்கு திரும்பியது அணிக்கு நம்மிக்கையை அளிக்கும் விதமாக உள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டிய பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கனக்கச்சிதமாக தன் பணியை செய்கிறார்.

தேவாட்டியா, தமிழக வீரரான விஜய் சங்கர்,மேத்திவ் வெட் அணிக்கு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். பந்துவீச்சில் சமி மற்றும் பெர்குசன் அச்சாணி அடிப்பது போல் துல்லியமாக பந்து வீசுகின்றனர். சுழல் பந்துவீச்சில் ரஷீத் கான் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தண்ணிகாட்டுகிறார். இரு அணிகளும் சமபலத்தோடு மோதுவதால் இன்றைய ஆட்டம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது!

Related posts