மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் புக்கதுறை மற்றும் வையாவூர் ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புக்கதுறை மற்றும் வையாவூர் பகுதியில் பேருந்து நிழற்குடை மற்றும் கலையரங்க கட்டிடம் அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் MLA விடம் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 23.70 இலட்சம் நிதி ஒதுக்கி புக்கதுறை மற்றும் வையாவூர் பகுதியில் பேருந்து நிழற்குடை மற்றும் கலையரங்க கட்டிடம் அமைப்பதற்கான பணி நடைபெற்று அதற்கான திறப்பு விழா 08/10/2025 இன்று ஒன்றிய அவைத் தலைவர் திரு பாலாஜி அவர்கள், வையாவூர் ஒன்றிய குழு உறுப்பினர் திரு மூர்த்தி அவர்கள் மற்றும் புக்கதுறை ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி தமிழரசி காளி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்.
இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி K.கீதா கார்த்திகேயன் அவர்கள், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் மதுராந்தகம் ஒன்றிய குழு துணை தலைவர் திரு A.குமரவேல் அவர்கள் ரவிச்சந்திரன், விநாயகமூர்த்தி, கேசவன், ரத்தினகுமார் உள்ளிட்ட
ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

