இன்பநிதி நடிக்கும் முதல் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படத்தை பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தெரிகிறது. இந்தத் தகவல், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்பநிதி தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சமீபத்தில் வெளியான தனுஷ் நடிப்பில் “இட்லி கடை” படத்தின் விநியோகஸ்தராக அறிமுகமான அவர், இப்போது நடிப்புப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது நடிப்புப் பயிற்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன, இது அவரது அறிமுகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள்” மற்றும் “மாமன்னன்” போன்ற சமூக கருத்துடன் கூடிய படங்களுக்கு பெயர் தாங்கிய இயக்குநர். உதயநிதி ஸ்டாலினின் கடைசி நடிப்புப் படமான “மாமன்னன்”ஐயும் அவர் இயக்கியிருந்தார்.
படத்தின் கதை விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் அடுத்ததாக இன்பநிதியும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

