ஃபர்ஸ்ட் சிங்கிள்
‘குலு குலு’ படத்தை அடுத்து சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கிக்’. பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தை தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும், அர்ஜுன் ஜனயா இசையமைக்க, ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ‘கிக்’ படத்தின் ‘சாட்டர்டே இஸ் கம்மிங்கு’ என்ற முதல் பாடல் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Get ready for an ultra-peppy track🤩🥳#SaturdayIsCominguuu song teaser from @iamsanthanam starrer #Kick here
➡️ https://t.co/sIRzbRfT8A@iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj #கிக் #SantasKick #KickFirstSingle pic.twitter.com/tJNUSmVnRk— Saregama South (@saregamasouth) October 5, 2022

