மக்கள் நீதி மய்யம் கட்சியினை தொடங்கி அரசியல் களத்தில் வலம் வரத்தொடங்கிய நிலையிலும், தனது திரைத்துறை சார்ந்த பணிகளில் தொடர்ச்சியான கவனம் செலுத்திவருகிறார் நடிகர் கமல். கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வந்தார் கமல் ஹாசன். தற்போது விக்ரம் திரைப்பட வேளைகளில் முடிவடைந்துள்ள நிலையில், விக்ரம் திரைப்பட வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகுமென தெரிகிறது.
இந்நிலையில், நடிகர் கமல் தனது அடுத்த திரைப்படமாக விருமாண்டி 2வில் நடிக்க உள்ளதாகவும், இதனை கொம்பன் திரைப்பட இயக்குனர் முத்தையா இயக்க உள்ளதாகவும், கிராமம் சார்ந்த கதைக்களத்திற்கு முத்தையாவே சரியான இயக்குனராக இருப்பாரென கமல் அவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் திரையுலக வட்டாரத்தில் செய்திகள் கசிகின்றன.
முன்னதாக, கடந்த 2004 ஆம் ஆண்டு கமல், அபிராமி, பசுபதி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வெளியான விருமாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.