Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தேர்தல் ரேசில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்; திமுக கூட்டணிக்கு ஆதரவு – கமல் ஹாசன் அதிரடி முடிவு

தேர்தல் ரேசில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்; திமுக கூட்டணிக்கு ஆதரவு – கமல் ஹாசன் அதிரடி முடிவு

March 25, 20263 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடாது என்று அறிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன், திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமது இந்த முடிவு குறித்து கமல் ஹாசன் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” என்ற திருக்குறளுடன் தொடங்கும் அந்த அறிக்கையில், ‘உயிரே உறவே தமிழே, வணக்கம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழ்நாடு முதல்வரும், துணை முதல்வரும் திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.

இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.

அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட.
ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.

இதையும் படிக்க :  இலவசங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - விக்கிரமராஜா வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.

தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அவர்கள் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே.

தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழ்நாடுதான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை. இது வெறும் ஆட்சி மட்டுமல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நீதிபரிபாலனம்.

இதையும் படிக்க :  உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு !

ஆகவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம்.’ என்று கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

எத்தனை சீட் என்பதை எண்ணவில்லை:முன்னதாக, திமுக தலைமை அலுவலமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஒரே கொள்கை ஒரே இலக்கை நோக்கித்தான் பயணித்து வருகிறோம். இப்போது நாட்டின் முக்கியமான போராட்டத்திற்காக தமிழகம் முன்னணியில் நிற்கிறது. இதற்கு உறுதுணையாக நாம் நிற்க வேண்டும் என்பது எனது கடமை என்று நான் முடிவு செய்து பல நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு அரசியல் தொழில் அல்ல கடமை. அப்படிதான் எல்லோரும் இருக்க முடியும். ஒரு கட்சியின் தலைவராக நான் எடுத்திருக்க முடிவு இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதுதான். என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.

ஆட்சி கட்டிலில் திமுக மீண்டும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை முதல்வரிடம் ஒரு சிட்டிசனாக, ஒரு தலைவனாக தெரிவித்து வந்துள்ளேன். சீட் எத்தனை என்பதை நான் எண்ணவில்லை. வெளியில் இருந்து நாங்கள் அழுத்தமான ஆதரவை தருவோம். நெருக்கடி கட்சிக்கு இல்லை; தமிழ்நாட்டிற்கே வந்துள்ளது. சுயமரியாதை பற்றி திமுகவிற்கு தெரியும்.” என்று கமல் ஹாசன் கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநெல்லையை உலுக்கிய பூசாரி கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்; மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Next Article சங்கரன்கோவில் அருகே கார் மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு; ஆத்திரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.