Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»நெல்லையை உலுக்கிய பூசாரி கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்; மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நெல்லையை உலுக்கிய பூசாரி கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்; மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

March 25, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருநெல்வேலியில் கோயில் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு சென்றபோது ’ஃபிளையிங் கிஸ்’ கொடுத்தபடி சென்றது பேசுபொருளாகியுள்ளது.

சீவலப்பேரியை சோ்ந்தவா் சிதம்பரம். இவர் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுடலை மாடசுவாமி கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் கோயில் வருமானம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்ம கும்பலால் சிதம்பரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார், நான்கு சிறார்கள் உட்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அப்போது நான்கு சிறார்களும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு சிறார்கள் தவிர, மீதமுள்ள 13 பேர் மீதான வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவு செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தார்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் குடிநீர் கேன் விலை திடீர் உயர்வு

அப்போது கொலை வழக்கில் தொடர்புடைய தங்கப்பாண்டி (29), பேச்சி குட்டி (29), முருகன்(28) ஆகிய மூவர் மீதும் குற்றம் உறுதி செய்யப்பட்டு, குற்றவாளிகள் என அறிவித்தார். இந்த மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 5000 அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மீதமுள்ள 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே வழக்கில் தொடர்புடையதாக பிடிக்கப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறார்களின் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க :  கல்லூரிகளில் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் - அமைச்சர் பொன்முடி !

இந்நிலையில் பூசாரி கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கொலை குற்றவாளிகள் மூவரையும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றபோது அவர்களில் ஒருவரான தங்கப்பாண்டி பத்திரிகையாளர்களை பார்த்து கையசைத்து ‘ஃபிளையிங் கிஸ்’ கொடுத்து சென்றது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இந்த கொலை சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பிரசித்தி பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட நபர் எவ்வித குற்றவுணர்ச்சி இல்லாமல் பத்திரிகையாளர்களை பார்த்து ’ஃபிளையிங் கிஸ்’ கொடுத்து சென்றது பேசு பொருளாகியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Article தேர்தல் ரேசில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்; திமுக கூட்டணிக்கு ஆதரவு – கமல் ஹாசன் அதிரடி முடிவு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.