காரி திரைப்படத்தின் “கொப்பமாவனே” லிரிக் பாடல் வெளியாகியுள்ளது. காரி திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் “சசிகுமார்”. இவர் ஒரு ‘தமிழ்’ திரைப்பட ‘இயக்குனர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர்’ ஆவார்.
‘சேது’ படத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் இயக்குனர் அமீரிடம் தனது முதல் இரண்டு படங்களான ‘மௌனம் பேசியதே’ மற்றும் ‘ராம்’ ஆகியவற்றிலும் பணியாற்றினார். சசிகுமார் ‘சுப்ரமணியபுரம்’, ‘பசங்க’ மற்றும் ‘சுந்தரபாண்டியன்’ ஆகியவற்றால் அறியப்பட்டவர்.
நடிகர் சசிகுமாரின் சமீபத்திய திரைப்படங்கள் பெரிதாக மக்களை கவரும் வண்ணம் அமையப்படவில்லை என்பதே எதார்த்தம். இருப்பினும் 2021-ல் வெளியான உடன்பிறப்பே திரைப்படம் நேரடியாக இணையத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. உடன்பிறப்பே திரைப்படத்தின் கதை ஒரு பெண் தனது நேர்மையான சட்டத்தை மதிக்கும் கணவனுக்கும், தவறுகளைக் கண்டால் பொங்கி எழும் சகோதரனுக்கும் இடையிலான கருத்தியல் போரில் சிக்கிய இரண்டு குடும்பங்களை எவ்வாறு இணைக்கிறாள் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.
உடன்பிறப்பே என்பது 2021-ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இது ‘சரவணன்’ என்பவரால் எழுதி இயக்கப்பட்டது. “2D என்டர்டெயின்மென்ட்” மூலம் “சூர்யா மற்றும் ஜோதிகா” தயாரித்துள்ள, இதில் “ஜோதிகா, எம். சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி” ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ‘சூரி, கலையரசன், நிவேதிதா, சதீஷ் மற்றும் சிஜா ரோஸ்’ ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘டி. இமான்’ இசையமைத்துள்ளார், அதே நேரத்தில் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை முறையே ‘ஆர். வேல்ராஜ் மற்றும் ரூபன்’ ஆகியோர் கையாண்டுள்ளனர்.
காரி என்பது ‘ஹேமந்த்’ இயக்கிய தமிழ் நாடகத் திரைப்படமாகும். காரி படத்தில் ‘சசிகுமார், அம்மு அபிராமி’ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கொப்பமாவனே’ பாடல் தந்தை மகன் உறவுப்பற்றிய உண்மைகளை தெளிவாக எடுத்துரைக்கிறது.