அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர், ஒரு வாரத்திற்கு பிறகு சடமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). கடந்த ஆண்டு சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த அவர், மேல் படிப்பிற்காக அமெரிக்க சென்றுள்ளார். அதன்படி, சான் பிரான்சிஸ்கோவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் பயோ மாலிக்குலர் பொறியியல் பிரிவில் முதுகலைப் பட்டப் படிப்பிலும் சேர்ந்து பயின்று வந்துள்ளார் சாகேத் ஸ்ரீனிவாசய்யா.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி சகேத் காணவில்லை கூறப்படுகிறது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததால், வெளியே எங்கேயாவது சென்றிருப்பார் என சாகேத்தின் நண்பர்கள் எண்ணியுள்ளனர். ஆனால், அடுத்த நாளும் அவர் வராததால், சந்தேகமடைந்த சக மாணவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஒரு வாரமாக மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யாவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும், மாணவர் பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு உள்ளூர் காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டது.
இந்த சூழலில், சாகேத் கடைசியாக சென்ர பார்க் ஹில்ஸ் பகுதியில் போலீசார் சோதனை செய்த போது, அவரது பாஸ்போர்ட், லேப்டாப் உடன் கூடிய பை கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சாகேத்தின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

