அரசியல்இந்தியாசமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடு

மேகதாது ஆணையால் தமிழ்நாடு பாதிக்காது – கர்நாடகா அரசு வாதம் !

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

மேகதாது ஆணை

காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அபய் ஓகா, ஜே.பி. பர்திவாலா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. அப்போது கர்நாடகா சார்பாக அவகாசம் கேட்டும், கர்நாடகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவகாசம் அளிக்கும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 10ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளார்.

Related posts