22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று இரண்டு முறை உயர்ந்த நிலையில், இன்று காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கத்தின் விலையானது இந்த ஆண்டு தொடக்கதிலிருந்தே தினசரி புதிய உச்சம் கண்டுவந்த நிலையில், கடந்த வார இறுதியில் அடுத்தடுத்த நாட்கள் விலை குறைந்தது. மத்திய பட்ஜெட் அறிவிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு சரிவு போன்ற காரணங்களால் விலை குறைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ. 240 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,270க்கு விற்பனையானது. அதன்படி சவரனுக்கு காலை ரூ. 640 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ. 1,920 அதிகரித்து ரூ. 1,14,160க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 630 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,900க்கும் அதன்படி சவரனுக்கு ரூ. 5,040 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி நேற்று காலை ரூ.280க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிற்பகலில் ரூ. 20 அதிகரித்து ரூ. 300க்கு விற்பனையானது. இன்று மீண்டும் ரூ. 20 அதிகரித்து ரூ. 320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிலோவுக்கு ரூ. 20,000 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளியானது ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

