சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து.
தீ – விபத்து
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2ஆவது பிளாக்கில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் தான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், சர்ஜிக்கல் பிளாக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பகுதியில் உள்ள வார்டுகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் வைத்துள்ள குடோனில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து இந்த தீ விபத்து காரணமாக அருகில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவிற்கு பரவும் அபாயம் இருந்து. மருத்துவமனையை சுற்றி கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள் என கண்டறிய தாமதமானது.
மீட்புக்குழு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர். மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் சிலிண்டர் ஒன்று வெடித்தாகவும். மேலும் சில உபகரணங்களும் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த கட்டடத்தின் அருகே பொது மக்களுக்கு நுழைய தடைவிதிக்கப்பட்டத. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டர்கள் .
அமைச்சர் பேச்சு
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் தீவிபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் நோயாளிகள் யாரும் இல்லை என்றும், அது மருத்துவ உபகரணங்கள் வைக்கும் குடோன் என்பதால், உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும், அந்த கட்டடத்தில் உள்ள நோயாளிகளும் தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.