தமிழ்நாடு

நெல்லை: பெண் S.I. யின் கழுத்தை அறுத்த… திருவிழா கூட்டத்தில் நடந்த விபரீதம்!

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அடுத்துள்ள பழவூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் கடந்த வாரம் மது போதையில் வாகனம் ஓட்டி சென்றபோது, கண்காணிப்பு பணியில் இருந்த பெண் துணை ஆய்வாளர் (SI) மார்கெரட் தெரசா ஆறுமுகத்தை பிடித்து அபராதம் விதித்துள்ளார். 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மார்கெரட் தெரசாவை வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தோடு ஆறுமுகம் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று, பழவூர் கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணிக்காக மார்கெரட் தெரசா வந்துள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஆறுமுகம் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மார்கெரட் தெரசா கழுத்தை அறுத்துள்ளார். மார்பு தோள்பட்டை என பல இடங்களில் காயம் ஏற்பட சம்பவ இடத்திலேயே மார்கெரட் தெரசா சரிந்து விழுந்தார்.

சக காவலர்கள் மார்கெரட் தெரசாவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறுமுகத்தை கைது செய்தனர். இது குறித்து இரண்டு பிரிவுகளில் ஆறுமுகம் மீது சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மார்கெரட் தெரசாவிற்கு கழுத்து மற்றும் மார்பு பகுதியில் ஆழமாக காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். துணை ஆய்வாளருக்கு நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது,