சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமான டைனோசர் அழிந்த காரணம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகளும் யூகங்களும் வெளியிடப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
ஆனால் தற்போது லண்டனில் இருக்கும் இம்பீரியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு சோதனை மாதிரியை உருவாக்கியுள்ளனர் . அதன்மூலமாக டைனோசர்கள் அழிவதற்கு காரணமாக இருக்கின்ற சிறுகோள் தாக்குதல் பற்றி அறிய முடிகிறதென கூறினார்கள் .
அதன்படி இம்பீரியல் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கிய மாதிரியில் [simulations] 60 டிகிரி கோணத்தில் சிறிய கோள் ஒன்று பூமியை தாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி மோதும் போது அது காலநிலையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும்.
அப்படி மோதும் போது வெளியிடப்பட்ட பல பில்லியன் டன் கணக்கான சல்பர் காற்றில் வெளியாகியது. அதனால், சூரிய ஒளியே பூமிக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டது. அதனால் பூமியில் 75% உயிர்கள் இறந்து போயின. இதில் டைனோசர்களும் அடக்கம் என விளக்கி இருக்கிறார்கள்.
இந்த மாதிரி குறித்து பேசிய ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் காரெத் கொலின்ஸ் [Gareth Collins], டைனோசர்கள் அழிவின் போது மிக மோசமான நிகழ்வுகள் நடந்தன.
ஒரு சிறிய கோள் ஒன்று சரியான கோணத்தில் மோதி வளிமண்டலத்தில் பருவநிலையை மாற்றும் வாயுக்களை வெளியிட்டுள்ளது. அதுதான் டைனோசர்களை முற்றிலுமாக அழித்தொழித்து இருக்கின்றன.
தற்போது மெக்சிகோவில் இருக்கின்ற சிக்ஸுலப் [Chicxulub] பள்ளத்தை சுற்றிலும் இருக்குமிடத்தில் பெரும்பாலும் தண்ணீர் அதோடு போரஸ் கார்போனேட் மற்றும் ஆவியாகிய பாறை ஆகியவையே தென்படுகின்றன.
இவை அந்த தாக்குதலின்போது சூடாகி அதனால் ஏராளமான கார்பன் டை ஆக்ஸைடு, கந்தகம், நீராவி போன்றவை வளிமண்டலத்தில் வீசப்பட்டிருக்க வேண்டும்.
நுண்ணிய கந்தக தூசுகள் பூமியில் சூரிய ஒளி படுவதை தடுத்தன. பூமியில் இருக்கும் தாவரங்களின் ஒளிசேர்க்கை ஒருபுறம் நின்றுபோனது. மறுபுறம் பூமி மிகவும் குளுமையானதாக மாறிக்கொண்டே போனது.
இப்படி நடந்த நிகழ்வுகள் பூமியில் அப்போதைக்கு இருந்த 75% உயிர்களை அழித்திருக்கிறது.இதுவே டைனோசர்கள் அழிய காரணமாக அமைந்தது.