அரசியல்தமிழ்நாடு

விலைவாசி உயர்வு – அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தேனி பங்களாமேட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தேனி நகர பொதுச்செயலாளர் அன்பழகன் நன்றி ஆற்றினார்.

Related posts