சூர்யா நடிப்பில், 2020ம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 பிரிவுகளில் தேசிய விருதை வென்றுள்ளது.
திரைத்துறையை சேர்ந்த பல்வேறு சிறந்த கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்பெயரில் 2020ம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருதின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த இயக்குனர் ஆகிய பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான படம் சூரரைப்போற்று. இந்த படம் ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ளது. சூர்யா சிறந்த நடிகருக்கான விருதையும், அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான விருதையும், ஜி.வி.பிரகாஷ்குமார் சிறந்த இசைகாண விருதையும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

