Editor's Picksதமிழ்நாடு

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் ; வெளியானது அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதிமுகவின் பொதுக்குழு கூட்டமானது இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மதிமுக பொதுக்குழுவில் கட்சியின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அமைப்பு ரீதியாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த சூழலில், தற்போது அக்கட்சியின் தலைமை கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் வைகோவின் மகன் துரை வைகோ.

முன்னதாக, வாரிசு அரசியலை எதிர்த்து உருவாக்கப்பட்ட கட்சியான மதிமுகவில் தனது மகனை முன்னிலைப்படுத்த வைகோ முயல்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. திராவிட இயக்கத்தை வலுப்படுத்தும் பொருட்டு கட்சியினை, திமுகவுடன் இணைத்து விட வேண்டுமென அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts