Editor's Picksதமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டது ; திமுக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மிக கடுமையாக சாடியுள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வரக்கூடிய சூழலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான கேள்வி நேரத்தில் பங்கேற்று தங்களது பகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்தனர் சட்டமன்ற உறுப்பினர்கள்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அரசு கொண்டுவந்தது என்ற ஒற்றை காரணத்தினாலேயே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.50000 வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக்குகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியிருக்கிறது திமுக அரசு” என தெரிவித்தார்.

மேலும், “தற்போது தினம் தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறுகின்றன. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டது” எனவும் அரசை கடுமையாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Related posts