Editor's Picksதமிழ்நாடு

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு ; கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – முதல்வர் ஸ்டாலின்!

விருதுநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் முகநூல் நட்பாக பழகி அவரை காதலிப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து அதனை தனது 7 நண்பர்களுடன் பகிர்ந்து, குறிப்பிட்ட பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த, ஹரிஹரன் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மிக கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படுமென தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

மேற்கண்ட விவகாரம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிலையில், அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ” இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி பொறுப்பு அதிகாரி ஒருவரையும் நியமித்துள்ளோம். வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளில் நான்கு பேர் சிறையிலும், 18 வயதிற்கு கீழான 4 குற்றவாளிகள் சிறப்பு கூர் நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

மேலும், ” இந்த வழக்கினை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குகளை போல் அல்லாமல், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக மிக கடுமையான தண்டனைகள் பெற்றுத்தரப்படுமென” தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னதாக, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டது என தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts