படப்பிடிப்பு நிறைவு
பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. முதன்மை கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்க, நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
டவிட்டர் பதிவு
இந்நிலையில், ‘பகாசூரன்’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாக இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் செல்வராகவன், ‘மகிழ்ச்சியான தருணங்கள் ! காலம் போனதே தெரியவில்லை’ என பதிவிட்டுள்ளார்.
மகிழ்ச்சியான தருணங்கள் ! காலம் போனதே தெரியவில்லை ! பேரன்புக்கு நன்றி 😍 https://t.co/WeWn3brcXb
— selvaraghavan (@selvaraghavan) October 11, 2022