சினிமாவெள்ளித்திரை

‘விக்ரம்’ 100-வது நாள் கொண்டாட்டம் : ரத்ன குமார் நெகிழ்ச்சி பதிவு!

வெற்றி விழா 

2017ம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதனைத்தொடர்ந்து கைதி, மாஸ்டர் போன்ற அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கியதின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குனராக வளர்ந்தார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கினார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் ரூ.400 கோடி வரை வசூல் செய்தது.

நெகிழ்ச்சி பதிவு

இந்நிலையில், விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டியுள்ளது. அதன்பெயரில் இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர், பிரபலங்கள் என பலரும் பங்கேற்றனர். இதில் இப்படத்தின் வசனகர்தா ரத்ன குமாருக்கு விருது வழங்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குனர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts